Type to search

‘சர்கார்’ படக்கதை திருட்டா?

CINEMA Cinema Top Story Kollywood

‘சர்கார்’ படக்கதை திருட்டா?

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. Sarkar Movie Story Stolen issue

இந்தப் படம், வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6ம் திகதி வெளிவரவுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார்.

கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்க, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகி பாபு எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் கதை தனது என வருண் ராஜேந்திரன் என்பவர் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தற்போது ‘சுக்ரன்’, ‘பெண் சிங்கம்’, ‘பொக்கிஷம்’ படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த வருண் `சர்கார்’ படத்தின் கதை, ‘செங்கோல்’ என்ற பெயரில் தான் எழுதிய கதை என கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை பாக்யராஜ் தலைவராக இருக்கும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் 2007ல் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரம்மாண்டமாக நடந்த `சர்கார்’ ஆடியோ வெளியீட்டு விழாவுக்குப் பிறகு, சர்கார் கதையும் தன்னுடைய செங்கோல் கதையும் ஒன்றுதான் என சந்தேகம் வரவே, எழுத்தாளர் சங்கத்திற்கு சென்று பாக்கியராஜிடம் மனு அளித்திருக்கிறார் வருண். ஆனால், இதை முருகதாஸ் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளதாம்.

மேலும், இது சம்பந்தமாக வருண் வெளிப்படையாக வந்து எந்த தகவலும் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. படம் வெளியாக இன்னும் 15 நாட்களே இருப்பதால் இந்த விவகாரம் என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Sarkar Movie Story Stolen issue, Sarkar Movie Story Stolen, Sarkar Movie Story, Sarkar Movie, Sarkar, Tamil Cinema News, Latest Tamil Cinema News, Tamil movie news, latest Tamil movie news

 

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like