Type to search

லிங்குசாமியின் சண்டக்கோழி 2 விமர்சனம்

CINEMA Cinema Head Line Cinema Top Story Kollywood

லிங்குசாமியின் சண்டக்கோழி 2 விமர்சனம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

லிங்குசாமி இயக்கத்தில் சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் வெளியான படம் சண்டக்கோழி. Sandakozhi 2 Tamil Review

விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மீன், லால் என நடிகர் பட்டாளமே நடித்திருந்தது. விஷால் மற்றும் லிங்குசாமிக்கு பெரிய வெற்றியைக் கொடுத்திருந்தது அப்படம்.

அந்தவகையில், தற்போது சண்டக்கோழி 2 வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் தனுஷ்- வெற்றிமாறனின் வட சென்னை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இப்படம் இன்று வெளியாகியுள்ளது.

இப்படத்தின் விமர்சனம் இதோ;

துரை அய்யாவாக ராஜ்கிரண், அவர் தலைமையில் அனைத்து ஊர் தலைவர்களும் கூட பஞ்சாயத்தில் ஆரம்பமாகின்றது படம்.

ஏழு வருடமாக தடைபட்டு நின்ற திருவிழாவை மீண்டும் நடத்துவதே அவர்களது நோக்கம்.

இந்நிலை, தன் கணவனை கொன்ற குடும்பத்தின் மொத்த வம்சத்தையும் அழிக்க துடிக்கும் வரலக்ஷ்மி மற்றும் அவரின் குடும்பம், எப்படியாவது மீதி இருக்கும் ஒருவனை இந்த திருவிழாவில் தீர்க்க திட்டம் போடுகின்றனர். ராஜ்கிரண் அடைக்கலம் கொடுக்கிறார்.

இரண்டாம் பாதியில், அப்பா காயம் பட்டத்தை எப்படி சமாளிக்கிறார், திருவிழா நிற்காமல் விஷாலால் நடத்த முடிந்ததா,மீண்டும் ராஜ்கிரணுக்கு நினைவு திரும்பியதா, வரலட்சுமியின் பகையை சமாளித்தாரா என்று விறு விறுப்பான திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர்.

கண்டிப்பாக ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிலையில், திரைக்கதையை மட்டும் நம்பி களம் இறங்கியுள்ளார் லிங்கு. வெறுமனே தலைப்பை மட்டும் வைக்காமல், முதல் படத்தின் தொடர்ச்சியாக, அதே கதாபாத்திரங்களை வைத்தது கூடுதல் பிளஸ்.

ராமதாஸ் காமெடி என்பதை தாண்டி குணச்சித்திர ரோலில் அசத்திவிட்டார். வரலக்ஷ்மயின் கதாபாத்திரத்துக்கு கொடுத்த பில்ட் அப்பில், எப்பொழுது தான் அவர் விஷாலுடன் நேரடியாக மோதுவார் என்ற எதிர்பார்ப்பை தூண்டியது படம்.

திருவிழாவை மறந்துபோன நவீன கால மக்களுக்கு, கிராமத்தை கண் முன் காட்டுகின்றனர். எனினும் இன்று கத்தி, சண்டை செய்வதையே முழு நேர பணியாக வைத்துள்ளது போல சித்தரித்தது சற்றே சலிப்பை தட்டுகிறது. தன்னால் நடிக்கவும் முடியும் என்று கீர்த்தி இரண்டாம் பகுதியில் அசத்தி விட்டார்.

பல இடங்களில் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்காக பல காட்சிகளை புகுத்திய இந்த படக்குழு, தமிழ் ரசிகர்களுக்கு அது சலிப்பை தட்டுமே என்று ஏனோ தோன்றவில்லை.

ஆகமொத்தத்தில் கமர்ஷியல் மசாலா விருந்து படைத்துவிட்டார் லிங்குசாமி.

Most Read:

 

அஜித் -நஸ்ரியா இணைகின்றனர்?

‘வட சென்னை’ Public Review

Sandakozhi 2 Tamil Review

எமது ஏனைய தளங்கள்

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies, Vadachennai Review Tamil

 

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: