Type to search

‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி!

CINEMA Cinema Head Line Cinema Top Story Kollywood

‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி!

Share
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பில் இன்றி வெளியாகியுள்ளது ‘வட சென்னை’ . Vadachennai Review Tamil

அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா, கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஸ், ராதாரவி மற்றும் டேனியல் பாலாஜி என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

முதல் படத்தின் கதையைப் பார்ப்போம்.

வட சென்னைப் பகுதியில் கடத்தலில் ஈடுபட்டிருக்கு ராஜனை (அமீர்), அவனுடன் இருக்கும் செந்தில் (கிஷோர்) மற்றும் குணா (சமுத்திரக்கனி)போன்றவர்கள் கொன்றுவிடுகின்றனர். இதற்குப் பிறகு, குணாவும் செந்திலும் அந்தப் பகுதியில் தாதாக்களாக உருவெடுக்கின்றனர்.

ஆனால், அவர்களுக்கிடையில் தொடர்ந்து மோதல் நடக்கிறது. ஒருவரை ஒருவர் பழிவாங்க காத்திருக்கின்றனர். ஒரு சிறிய குற்றத்திற்காக சிறைக்குள் வரும் அன்பு (தனுஷ்), சிறையில் உள்ள செந்திலை கொலை செய்ய முயற்சிக்கின்றார்.

நண்பர்களாக இருந்த குணாவும், செந்திலும் பகையாளிகளானது ஏன், அன்பு ஏன் செந்திலைக் கொல்ல முயல்கிறான், ராஜனின் மனைவி சந்திரா (ஆண்ட்ரியா) ஏன் குணாவைத் திருமணம் செய்கிறாள், அவளுக்கும் அன்புவுக்கும் என்ன தொடர்பு என்பது மீதிக் கதை.

படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் அவ்வளவு நேர்த்தி. எண்பதுகளின் பிற்பாதியில் நடக்கும் கதை என்பதால், அந்த காலகட்டத்தை திரையில் கொண்டுவர ரொம்பவுமே முயன்றுள்ளனர். குறிப்பாக சென்னையின் பழைய மத்திய சிறைச்சாலையின் செட்.

இதுதவிர, எம்.ஜி.ஆர். மரணம், ராஜீவ் காந்தி கொலைசெய்யப்படுவது, அதை ஒட்டிய கலவரங்கள் என அந்த காலகட்டத்திற்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கிறார் இயக்குனர்.

ரத்தம் தெறிக்கும் வகையில் படம் முழுவதும் செல்வதால் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் 18 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கு படம் உகந்ததல்ல.

அன்பு என்கிற கதாபாத்திரத்தில் தனுஷ் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் வியப்பின் எல்லைக்கே கொண்டுசெல்கிறார். வாயைத்திறந்தாக் கெட்ட வார்த்தைகளைக் கொட்டும்ம் ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு நடிகையாக மேலும் உயரத்துக்கே செல்கின்றார்.

படத்தில் தனுஷுக்கு போட்டி ஆண்ட்ரியாதான், அந்தளவுக்கு நடிப்பில் ராட்சசியாக உருவெடுத்துள்ளார்.

கிஷோர், சமுத்திரக்கனி படத்தில் மட்டும் போட்டியாளர்கள் இல்லை, நடிப்பிலும் போட்டி போடுகிறார்கள். இவர்களுடன் கூடவே டேனியல் பாலாஜி, பவன், சுப்பிரமணிய சிவா, ராதாரவி என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான தேர்வும், அதில் அவர்களது நடிப்பும் அவ்வளவு யதார்த்தம்.

அளவான கானா பாடல்கள், அதையும் அளவெடுத்த வகையில் மிகக்குறைவான இடங்களில் பின்னணி இசை என்று பின்னிப்பெடலெடுக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

படம் தொடங்கும் போது முக்கிய பாத்திரங்களாகத் தென்படும் பலர், படம் நகர நகர மங்கிப்போக, ஆண்ட்ரியாவும் தனுஷும் மேலெழுவது ரசிக்கும்படி இருக்கிறது. அடுத்த பாகமான “வட சென்னை 2 – அன்புவின் எழுச்சி” குறித்து ஒரு எதிர்பார்ப்பையும் எற்படுத்துகிறது.

படத்தின் ஒலிப்பதிவும் ஒளிப்பதிவும் சிறப்பாக இருப்பதாகச் சொல்ல முடியாது. பல இடங்களில் வசனங்களும் பின்னணியில் ஒலிக்கும் குரல்களும் பலவீனங்களாக இருந்தாலும், வெற்றிமாறனின் திரைக்கதை, இயக்கம் என்பன நம்மை கட்டிப்போட்டு விடுக்கின்றன.

மொத்தத்தில் வட சென்னை வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி…

Most Read:

 

சர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு?

 

அஜித் , விஜய் எல்லம் சும்மா!: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை

எமது ஏனைய தளங்கள்

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies, Vadachennai Review Tamil


 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Tags:

You Might also Like