Type to search

முண்டாசுப்பட்டி – 2 விரைவில்!

CINEMA Cinema Head Line Cinema Top Story Kollywood

முண்டாசுப்பட்டி – 2 விரைவில்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படமான ராட்சசன் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. Mundasupatti 2 Vishnu Vishal

சைக்கோ திரில்லர் படமான இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார்.

இந்நிலையில்க முண்டாசுப்பட்டி – 2  படத்தில் நடிக்கவும் தான் தயாராக இருப்பதாக சொல்கிறார் விஷ்ணு விஷால்.இதுகுறித்து ராட்சசன் படத்தின் சக்சஸ் பிரஸ்மீட்டில் விஷ்ணுவிஷால் கூறுகையில்,

முண்டாசுப்பட்டி படத்தை நகைச்சுவையாக இயக்கிய ராம்குமார், ராட்சசன் படத்தை அதில் இருந்து மாறுபட்டு சைக்கோ திரில்லர் கதையாக இயக்கினார்.

இரண்டு படங்களையுமே மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இதனால் அடுத்ததாக முண்டாசுப்பட்டி – 2 படத்திலும் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்றார் விஷ்ணு.

மேலும், ராட்சசன் படத்தின் வெளியீட்டின் முன்னர், ஒருவேளை இந்த படம் தயாரிப்பாளருக்கு எதிர்பார்த்தபடி வசூல் கொடுக்காவிட்டால் நான் அவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நான் ஈடுகட்டுவேன் என்று கூறியிருந்தே. ஆனால் அப்படியொரு நிலை ஏற்படவில்லை. படம் வெற்றி பெற்று அவருக்கு லாபத்தை கொடுத்து விட்டது.என்றாலும், அடுத்தபடியாக ராட்சசன் பட தயாரிப்பாளர் என்னை வைத்து படம் தயாரித்தால் அவர் என்ன சம்பளம் கொடுத்தாலும் நடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்றார் விஷ்ணு.

இந்நிலையில், ராம் குமார் அடுத்ததாக தனுஷ் உடன் இணையவுள்ளார். இதைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது, மேலும் தனுஷுடன் இந்த படத்தை முடித்த பிறகு முண்டாசுப்பட்டி 2 படத்தை இயக்க இருக்கிறார்.

 

Most Read:

பிரச்சினைகள் இல்லாமல் சர்கார்!

 

எமது ஏனைய தளங்கள்

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: