Type to search

‘ஆண் தேவதை’ Movie Review

CINEMA Cinema Head Line Cinema Top Story Kollywood

‘ஆண் தேவதை’ Movie Review

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

 

ரெட்டச்சுழி படத்தை தொடர்ந்து இயக்குனர் தாமிரா இயக்கியுள்ள படம் ‘ஆண் தேவதை’. Aan devathai Movie Review

சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் இப்படத்தில் நடித்துள்ளனர். தாமிரா.

விஜய்மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ளதுடன், ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் ஹீரோவாக சமுத்திரக்கனி நடித்துள்ளார், அனாதையாக இருக்கும் கதாநாயகிக்கு ஆதரவு கொடுத்து திருமணம் செய்து கொள்கிறார் கதாநாயகன்

இவர்களின் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருக்கிறது இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள், அதன் பிறகு தான் குடும்பத்தில் வெடிக்கிறது பிரச்சனை

இவர்கள் இருவரின் வாழ்க்கையில் காலையில் எழுந்தவுடன் வேளை குழந்தைகளுக்கு சாப்பாடு பிறகு அலுவலகத்தில் வேலை, என சுமூகமாக ஓடிக்கொண்டிருந்த குடும்ப வாழ்க்கை.

சமுத்திரகனி மெடிக்கல் ரெப்பாக இருக்கிறார் ஆனால் கதாநாயகியோ ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார், இப்படி ஏற்றத்தாழ்வுடன் வேலை பார்க்கிறார்கள், கதாநாயகிக்கு இன்னும் நிறைய சம்பாதிக்கவேண்டும், ஆடம்பரமாக வாழ வேண்டும் என ஆசை.

ஒரு கட்டத்தில் குழந்தைகளைப் கவனித்துக்கொள்வது யார் என்ற சிக்கலால் வேலையை விட்டு விடுகிறார் சமுத்திரக்கனி சுமுகமாக போய்கொண்டிருந்த குடும்பம் அலுவலக பிரச்சனையால், இவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது.

இதனால் ஒரு காலகட்டத்தில் கணவனும் , மனைவியும் பிரிகிறார்கள் அதன் பின்பு எப்படி செய்கிறார்கள் என்பதுதான் மீதி கதை.

படத்தில் சமுத்திரக்கனிக்கு குழந்தையாக நடித்திருக்கும் பெண் குழந்தை ஏற்கனவே வெப் சீரியலில் நடித்து வந்துள்ளார் அதனால் அவரின் நடிப்பு மிகவும் நன்றாக உள்ளது.

மற்றொரு குழந்தையின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்து விட்டது, படத்தின் கதையை தாங்கிப் பிடிப்பது ஜிப்ரானின் இசை, சமுத்திரகனி அவரின் கதாபாத்திரத்தில் சோகமான காட்சிகளிலும் அற்புதமாக நடித்துள்ளார்.ஆனால் இவர் சொல்ல வரும் கருத்தை அறிவுரை சொல்வது போல் சொல்வதை கண்டிப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும் ஏனென்றால் பல ரசிகர்களிடம் அய்யயோ வந்துட்டார் என்ன புலம்ப வைத்து விடும்.

படத்தில் நகைச்சுவை நடிகர் இல்லாதது குறைவாக தெரிகிறது என்னதான் சமுத்திரக்கனி காமெடி செய்தாலும் அது காமெடியாக எடுத்துக்கொள்ள முடியவில்லை .ஒளிப்பதிவாளர் தனது வேலையை சிறப்பாக செய்துள்ளார், விஜய் சேதுபதியின் 96 திரைப்படம் வெளியாகி பலரின் கடந்த கால வாழ்க்கையை நினைவுக்கு கொண்டு வந்தது.

அதேபோல் இந்த ஆண் தேவதை திரைப்படமும் பலரின் வாழ்க்கையை தன் கண் முன்னே கொண்டு வரும், இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு பலரின் குடும்ப வாழ்க்கைக்கு விடிவு காலம் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Aan devathai Movie Review

எமது ஏனைய தளங்கள்

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: