Type to search

பிக்பாஸ் நட்சத்திரத்துக்கு விஜய் அளித்த உறுதி!

CINEMA Cinema Head Line Cinema Top Story Kollywood

பிக்பாஸ் நட்சத்திரத்துக்கு விஜய் அளித்த உறுதி!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நடிகர் விஜய் தன்னை புகழந்ததாக நடிகர் வையாபுரி தெரிவித்துள்ளார். Vijay Vaiyapuri Big Boss

வையாபுரி பல முக்கிய கதாநாயகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் சமீப காலங்களாக பெரிதாக எந்தப் படத்திலும் வையாபுரி நடிக்கவில்லை.

வையாபுரி நடிகர் விஜயுடன் பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும், போக்கிரி, வில்லு, சுறா போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் வையாபுரி அளித்துள்ள பேட்டியில் நடிகர் விஜயை சர்கார் படபிடிப்பில் சந்தித்ததாக தெரிவித்தார்.

இது குறித்து பேசியுள்ள வையாபுரி, `நானும் விஜய்யும் நடித்து நீண்ட நாட்களாகிவிட்டன. இது குறித்து வெளியில் செல்லும்போதெல்லாம் அவரது ரசிகர்கள் என்னிடம் கேட்பார்கள். நான் சமீபத்தில் சர்கார் படபிடிப்புக்கு சென்று விஜயை சந்தித்தேன். அப்போது விஜய், தான் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்துடன் பார்த்ததாக தெரிவித்தார்”என்று வையாபுரி கூறினார்.

மேலும் “பிக் பாஸில் நீங்கள் அருமையாக விளையாடினீர்கள். என்னுடைய அடுத்த படங்களில் உங்களுக்கு வாய்ப்பு வழங்குகிறேன் என்று தெரிவித்தார்” என்று வையாபுரி தெரிவித்தார்.

 

Most Read:

சர்கார் Latest Update!

நோட்டா விமர்சனம்!

எமது ஏனைய தளங்கள்

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies

 

 

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like