Type to search

ஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்

Bollywood CINEMA Cinema Top Story

ஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஜான்சி ராணியின் கதை மணிகர்ணிகா என்ற பெயரில் ஹிந்தியில் உருவாகிறது. இதில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தபோது கங்கனா ரனாவத் உடனே ஏற்றுக்கொண்டார். அதற்காக குதிரை ஏற்றம், கத்தி சண்டை பயிற்சிகள் பெற்றார்.Kangana Ranaut becomes director

இப்படத்தை இயக்குனர் கிரிஷ் இயக்கி வந்துகொண்டிருந்த போது, திடீரென்று தெலுங்கில் உருவாகும் என்.டி.ராமராவ் வாழ்க்கை படத்தை இயக்க ஒப்புக்கொண்டார்.

அவசர அவசரமாக மணிகர்ணிகா படத்தை முடித்தவர், என்.டி.ஆர் வாழ்க்கை படத்தை இயக்க கிரிஷ் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தை திரையிட்டு பார்த்த தயாரிப்பாளர் மற்றும் கங்கனா ரனாவத்துக்கு சில முக்கிய காட்சிகள் பிடிக்கவில்லை. அக்காட்சிகளை ரீஷூட் செய்து தரும்படி இயக்குனரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அதன மறுத்து விட்டார் கிரிஷ்.

என்.டி.ராமராவ் படத்தை திட்டமிட்டபடி முடித்து தர வேண்டும் என்று ஏற்கனவே என்.டி.பால கிருஷ்ணா கூறியிருந்ததால் கேட்டுக் கொண்டிருந்த படியால்  அப்படத்தை இயக்கும் பணிகளில் பிஸியாகிவிட்டார் கிரிஷ்.

எனவே  மணிகர்ணிகா படத்தின் முக்கிய காட்சிகளை ரீ ஷூட் செய்யும் இயக்குனர் பொறுப்பை ஏற்றார் கங்கனா.

ஆனால் இதை இப்படத்தில் நடித்து வந்த வில்லன் நடிகர் சோனு சூட் ஏற்க மறுத்துவிட்டார். இயக்குனர் மாற்றத்தை காரணம் காட்டி அப்படத்திலிருந்து அவர் விலகி விட்டாராம். இதனால் மணிகர்ணிகா படம் திட்டமிட்டபடி உருவாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: