Type to search

திருமணமானால் என்ன? – சமந்தா கேள்வி

CINEMA Cinema Head Line Kollywood

திருமணமானால் என்ன? – சமந்தா கேள்வி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொதுவாக தமிழ் திரையுலகில் நடிகைகள் திருமணமான பின் வரவேற்கப்படுவதில்லை. திருமணமான பின் முன்னணி நடிகைகள் கூட கூட திருமணம் ஆன பின்பு அம்மா, அண்ணி, அக்கா போன்ற கேரக்டர்களில் தான் நடிக்க அழைக்கப்படுகிறார்கள். ஆனால் இவற்றுக்கு எல்லாம் முற்றுப் புள்ளியாக நடிகை சமந்தா திருமணமான பின்பும் முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.Samantha comment tamil film industry life 

இது தொடர்பாக சமந்தாவிடம் கேட்ட போது, “நான் பத்து வருடமாக கதாநாயகியாக நடிப்பதை பெரிய விஷயமாக நினைக்கிறார்கள்.

என்னை போலவே சில நடிகைகள் இன்றும் நடித்து வருகிறார்கள். பொதுவாக திருமணமான நடிகைகளுக்கு மார்க்கெட் சரிந்து விடும் என்ற கருத்தை உடைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கேற்ப திருமணமான பின்பு எனது படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. திருமணமான பின்பு மார்க்கெட் நடிகைகளுக்கு இருக்காது என்ற மாயையை இங்கு உள்ளவர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள் . ஆனால் ரசிகர்கள் அப்படி நினைக்கவில்லை என்பது என் படங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

விமர்சனங்கள் தான் என்னை பெரிதும் உயர்த்துகின்றன. என்னால் முடியாது என்று ஒரு கேரக்டரை சொன்னால், அந்த கேரக்டரை எடுத்து நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்காக கடின உழைப்பை செலுத்துவேன்,” என்கிறார்.

Tag: Samantha comment tamil film industry life

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: