Type to search

பியார் பிரேமா காதல் உருவாகிய பெருமை அனைத்தும் சிம்புவுக்கே.. : ஹரிஷ் கல்யாண் பேட்டி..!

CINEMA Cinema Head Line Kollywood

பியார் பிரேமா காதல் உருவாகிய பெருமை அனைத்தும் சிம்புவுக்கே.. : ஹரிஷ் கல்யாண் பேட்டி..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “பியார் பிரேமா காதல்” படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், படம் பற்றி பேசிய ஹரிஷ் கல்யாண், சிம்புவுடனான நட்பு பற்றி பகிர்ந்து கொண்டார்.Harish Kalyan open talk PyaarPremaKaadhal

அதாவது ”பியார் பிரேமா காதல்” படக்குழு அளித்த சிறப்பு பேட்டியில் ஹரிஷ் கல்யாண் பேசும் போது.. :-

”பிக்பாஸ் முடித்து வெளியே வந்த பிறகு நானும், ரைசாவும் ஒரு செல்ஃபி எடுத்தோம். அந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகியது.

எங்கள் இருவரையும் சேர்ந்து `ஹரைசா’ என்று ட்ரெண்டாக்கினர். அதுபற்றி நாங்கள் பேசினோம். அப்போது தான் ரசிகர்கள் எங்களை திரையில் சேர்ந்து பார்க்க விரும்புகின்றனர் என்பது புரிந்தது. அதுதான் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க காரணம்.

இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளன. இயக்குநர் இளனும் பாடல்களை எழுதியிருக்கிறார், ஆனால் எனக்கு தான் பாட வாய்ப்பு கிடைக்கவில்லை. யுவன், அவரது அடுத்த படத்தில் என்னை பாட வைப்பதாக சொல்லியிருக்கிறார்.

பியார் பிரேமா காதல் படத்தின் தலைப்புக்கு சிம்பு தான் காரணம். அவரது வரிகள் என்பதால், அவரிடம் படத்தின் தலைப்பு வேண்டும் என்று கேட்டேன். அவர், என்னிடம் இருந்து என் சம்பந்தமாக உனக்கு ஏதாவது உதவும்படியாக இருந்தால், எனக்கு சந்தோஷம் தான் என்றார்.

சிம்பு தான் என் தலைவர். அரசியலுக்கு வர அவருக்கு விருப்பம் இல்லை. ஆனால் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.

பிரச்சனை வந்தால் தான் தோள்கொடுக்க வேண்டும் என்று அவர் நினைக்க மாட்டார். எந்த நேரத்திலும் வருவார். நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்பவர். அதை தான் செய்யவும் விரும்புவார்.

மேலும், இப்படத்தில் முனிஸ்காந்த்தும், நானும் இணைந்து நடித்துள்ள காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கும். காதல், பாடல் என அனைத்தும் கலந்த இளைஞர்களுக்கான படமாக பியார் பிரேமா காதல் இருக்கும்”

இவ்வாறு ஹரிஷ் கல்யாண் கூறியுள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)

அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் களமிறங்க தயாராகும் அஜித்தின் விஸ்வாசம்..!

இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வரூபம்-2 படத்தின் முன்னோட்டம்..!

ஆடு – மாடுகளைப் போன்று அனைவரையும் பிரித்துக் காட்டுகின்றேன் : பிக்பாஸ் வைஷ்ணவி சவால்..!

2.0 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை : ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி..!

மீண்டும் தெலுங்கு நடிகரை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி : கெட்ட வார்த்தைகளால் விளாசியதால் பரபரப்பு..!

விவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..!

ஐம்பதாவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகாது : ஹன்சிகா திடீர் தகவல்..!

Tags :-Harish Kalyan open talk PyaarPremaKaadhal

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: