Type to search

தமிழ் சினிமாவில் அடுத்த கமல்ஹாசன் தனுஷ்தான் : கஸ்தூரி புகழாரம்..!

CINEMA Cinema Head Line Kollywood

தமிழ் சினிமாவில் அடுத்த கமல்ஹாசன் தனுஷ்தான் : கஸ்தூரி புகழாரம்..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

”வடசென்னை” படத்தின் டீசரை பார்த்த நடிகை கஸ்தூரி, ”தமிழ் சினிமாவில் அடுத்த கமல், தனுஷ்தான்..!” என்று பாராட்டியிருக்கிறார்.Kasturi wishes Dhanush Vadachennai movie teaser

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-

”விசாரணை” படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் ”வட சென்னை”. மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் பிறகு முதல் பாகத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்தப் படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. இது தவிர இந்த படத்தினை லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிடவுள்ளது.

இந்நிலையில், முதல் பாகத்தின் டீசர் ஜூலை 28 ஆம் திகதி தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு டிரெண்டிங்கானது. இதில் சந்தோஷ் நாராயணனின் பிண்ணனி இசையில் தனுஷின் தெறிக்கும் வசனத்தில் டீசர் அனல் பறக்கிறது. படம் எப்படி இருக்கும் என டீசரே சொல்லிவிட்டது.

இந்த டீசருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது. டீசரை பார்த்த நடிகை கஸ்தூரி, ”வடசென்னை டீஸர் பாத்துட்டேன். அடுத்த கமல் தனுஷ் தான் தனுஷேதான்..!” என்று கூறி பாராட்டியிருக்கிறார்.

Photo Credit : Google Image

<<MOST RELATED CINEMA NEWS>>

போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!

இணையத்தில் திருட்டுத்தனமாக லீக் ஆன சன்னிலியோனின் வாழ்க்கை படம்..!

சர்கார் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு : வேறொருவருக்கு கை மாற்றியது ஏன்..!

விடுமுறைக்கு சென்றது கூடவா குற்றம்..? : கொந்தளிக்கும் டாப்ஸி..!

ஆரவ் நடிக்கும் படத்தில் ஜோடியாகும் நிஜ காதலி.. : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

வாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..!

ஜுங்கா : திரை விமர்சனம்..!

பியார் பிரேமா காதல் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!

மகத் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம் : பிக்பாஸ் வீட்டுக்குள் அதிர்ச்சியில் மகத்..!

Tags :-Kasturi wishes Dhanush Vadachennai movie teaser

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: