Type to search

முத்தத்திற்கு மறுத்தேன்.. 3 படங்களை இழந்தேன் : மடோனா செபஸ்டியன் பேட்டி..!

CINEMA Cinema Top Story Kollywood

முத்தத்திற்கு மறுத்தேன்.. 3 படங்களை இழந்தேன் : மடோனா செபஸ்டியன் பேட்டி..!

Share
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

“பிரேமம்” படத்தின் மூலம் அறிமுகமான மடோனா செபஸ்டியன் ”ஜுங்கா” படம் மூலம் விஜய்சேதுபதியுடன் 3 ஆவது முறை இணைந்து இருக்கிறார்.(Actress Madona Sebastian Says loss three film)

இப்படத்தில் நடித்தமை குறித்து மடோனா கூறியதாவது.. :-

* ஜுங்காவில் கௌரவ வேடத்தில் நடித்தது விஜய்சேதுபதிக்காகவா..?

விஜய்சேதுபதி என்மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறார். அதுதான் முதல் காரணம். கதையை கேட்டேன். என் கதாபாத்திரம் மிகவும் பிடித்தது. எனவே சம்மதித்தேன். 5 நிமிடங்கள் வந்தாலும் பரவாயில்லை. ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

* தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று 4 மொழிகளில் நடிக்கும் அனுபவம்..?

நான் புதிதாக எதையாவது கற்றுக்கொண்டே இருக்க விரும்புவேன். எனவே மொழி பிரச்சினை இல்லை. எந்த மொழியாக இருந்தாலும் முன்கூட்டியே வசனங்களை வாங்கி வைத்து அதை மனப்பாடம் செய்துகொள்வேன். தமிழும் கற்றுக்கொண்டு வருகிறேன்.

* விஜய்சேதுபதி உங்களது அர்ப்பணிப்பை புகழ்கிறாரே..?

எனக்கு அப்படி எதுவும் தெரியவில்லை. அவரது பாராட்டு எனக்கு ஊக்கம் அளிக்கிறது. இன்னும் நன்றாக பண்ண வேண்டும் என்ற பொறுப்பு வருகிறது. ஒவ்வொரு படம் பார்க்கும்போதும் அதில் இருந்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்கிறேன்.

* எப்படி படம் தேர்வு செய்கிறீர்கள்..?

முதலில் கதை என்ன சொல்ல வருகிறது என்று பார்ப்பேன். அடுத்து எனது கதாபாத்திரத்தின் தன்மை. முக்கியமாக இயக்குனரின் திறமை. இவைகளுக்கு பிறகு தான் சம்பளம் உள்ளிட்ட மற்ற வி‌ஷயங்கள்.

* காதல் அனுபவம்..?

என்னுடைய தனிப்பட்ட வி‌ஷயங்களை பேச விரும்பவில்லை. ஆனால் அப்படி ஒன்று இருந்தால் வெளிப்படையாக அறிவிக்க தயங்க மாட்டேன்.

* நீங்கள் அணியும் உடைகள் வித்தியாசமாக இருக்கிறதே..?

நான் இதை கவனித்தது இல்லை. ஆடைகள் நமது குணத்தை பிரதிபலிக்கும். எனவே பார்த்து பார்த்துதான் தேர்வு செய்வேன்.

* அதிகம் படங்களில் பார்க்க முடியவில்லையே..?

ஆமாம். லிப்லாக் முத்தத்திற்கு மறுத்ததால் கடந்த 3 மாதங்களில் 3 படங்களை இழந்துள்ளேன். அதற்கு எல்லாம் இப்போது நான் தயாராக இல்லை. கட்டிப்பிடிக்கும் காட்சியில் முதல்முறை நடித்தபோது அம்மாவுக்கு போன் பண்ணி அழுதிருக்கிறேன். அதுபோல நடிப்பது சிரமம். நான் கூச்ச சுபாவம் கொண்டவள். பிறரிடம் பேசவே பயப்படுவேன். எனக்கு ஒரு சின்ன தங்கை இருக்கிறாள். அவளுடன் நேரம் செலவிடவே அதிகம் விரும்புவேன்.

* நடிப்பு தவிர எதில் ஆர்வம்..?

நான் அடிப்படையில் ஒரு பாடகி. சொந்தமாக ஒரு இசைக்குழு நடத்தி வருகிறேன். ஆனால் படங்களுக்கு இசை அமைக்கும் அளவுக்கு நம்பிக்கை இல்லை.

* மலையாள நடிகர் சங்கத்தில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதே..?

நான் எந்த சங்கத்திலும் உறுப்பினராக இல்லை. இந்த வி‌ஷயத்தில் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.

* நடிகை என்றால் பொது இடங்களில் தொல்லைகள் வருமே..?

ஆமாம். நடிகைகளும் சாதாரண மனிதர்கள் தான். இதை அனைவரும் உணர வேண்டும். நான் பெண்ணியவாதி அல்ல. ஆனால் ஆணும் பெண்ணும் சமமாக மதிக்கப்பட வேண்டும். தனி மனித உரிமை மிக முக்கியம்.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

*டூ பீஸ் ஆடையில் கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பியா..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

எனக்கு மிகவும் பிடித்தவர் நடிகர் அஜித் : ஸ்ரீரெட்டி பரபரப்பு பேட்டி..!

ஜீவாவின் திடீர் முடிவு : கலக்கத்தில் ரசிகர்கள்..!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கார்த்தி – சூரி : செம கலாட்டா..! (படங்கள் இணைப்பு)

தமிழ்ப்படம் 2 : திரை விமர்சனம்..!

ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!

ரஜினியின் 2.0 பட வெளியீட்டில் சிக்கல்..!

சங்கத்து வேலைய பார்க்காமல் அங்கத்து வேலையை பார்க்கும் விஷால் : ஸ்ரீ ரெட்டி பகீர் புகார்..!

Tags :-Actress Madona Sebastian Says loss three film

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Tags: