Type to search

பிக் பாஸ் மேடையை அலங்கரித்த ஸ்ருதி ஹாஸன் பாடல் : விஸ்வரூபம் 2 பாடல் வெளியீடு..!

BIGG BOSS CINEMA Cinema Head Line Kollywood

பிக் பாஸ் மேடையை அலங்கரித்த ஸ்ருதி ஹாஸன் பாடல் : விஸ்வரூபம் 2 பாடல் வெளியீடு..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தமிழில் ஒளிபரப்பாகிவரும் “பிக் பாஸ்” மேடையில் ”நானாகிய நதிமூலமே..”, ”ஞாபகம் வருதா..” ஆகிய பாடல்களை கமல், ஸ்ருதி ஹாஸன் ஆகியோர் பாடியுள்ளார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது ”விஸ்வரூபம் 2” பட பாடலை வெளியிடுவதாக கமல் ஹாஸன் அறிவித்தது போன்றே செய்தார்.(Viswaroopam 2 songs performed Shruthi Haasan Biggboss 2 stage)

”பிக் பாஸ்” மேடையை இசைக்கச்சேரி மேடை போன்று மாற்றி விட்டார்கள். ஜிப்ரான் தனது குழுவினருடன் வந்து பார்ப்பவர்கள் அசந்துபோகும் படி செய்துவிட்டார்.

அந்தவகையில், ”நானாகிய நதிமூலமே..” பாடலை கமல் ஹாஸன் பாடத் துவங்கியதும் ஸ்ருதி ஹாஸன் பாடிக் கொண்டே பிக் பாஸ் மேடைக்கு வந்தார். அப்பாவும், மகளும் ஒரே மேடையில் பாடியதை பார்த்து பார்வையாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மேலும், அப்பாவை விட உயரமாக இருப்பதால் கொஞ்சம் குனிந்து குள்ளமாக பாவனை செய்தார் ஸ்ருதி.

ஸ்ருதியின் காதலர் மைக்கேல் கார்சேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து பார்வையாளர்களுடன் சேர்ந்து அமர்ந்திருந்தார். ஸ்ருதி என்று பெயர் வைக்கும்போது அவர் பாடகியாக வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அது நடந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் கமல்.

ஸ்ருதி ஹாஸனும் தன் பங்கிற்கு சென்றாயனுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தார். அவர் ஸ்ப்லென்டிட் என்று கூற சென்றாயனோ ஸ்ப்ளெண்டர் என்றார். ”விஸ்வரூபம் 2” பட ட்ரெய்லரையைும் போட்டியாளர்களுக்கு போட்டுக் காட்டினார் கமல். கமலை தெய்வமாக பார்ப்பதாக கூறினார் டேனி.

ஞாபகம் வருகிறதா என்ற பாடலை பாடும் முன்பு ஸ்ருதி தனது அப்பா கமலை பார்வையாளர்களுடன் சேர்ந்து அமருமாறு கூறி அனுப்பி வைத்தார். ஸ்ருதி ஆடிக் கொண்டே பாடியதை பார்த்து பெருமையில் மீசையை முறுக்கினார் கமல் ஹாஸன்.

அத்துடன், நான் எழுதிய முதல் அருமையான கவிதை ஸ்ருதி தான் என்று கமல் தெரிவித்தார். ஞாபகம் வருதா பாடலை எழுதியபோது என் அம்மா நினைவு வந்தது. ”வாகை சூட வா..” பட பாடல்களை கேட்ட பிறகு அது மிகவும் பிடித்துப் போய் ஜிப்ரானை தனது படத்திற்கு இசையமைக்க வைத்ததாக கூறினார் கமல்.

<MOST RELATED CINEMA NEWS>>

நித்யா – பாலாஜி இடையேயான சண்டையை அதிகம் காண்பிக்க காரணம் : கமல் ஹாஸன் விளக்கம்..!

பாம்பு மனிதர்கள்.. ஆளை விழுங்கும் ராட்சத புழுக்கள்.. : குழந்தைகளுக்கான ’அனுமனும் மயில்ராவணனும்’ திரைப்படம்..!

ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் தல பொங்கல் : விஸ்வாசம் லேட்டஸ்ட் அப்டேட்..!

உடல் உறுப்புக்கள் திருட்டுக்காக நடிகை கடத்தல்..!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!

பாலாஜி – நித்தியா இடையில் வலுக்கும் உச்சக்கட்ட சண்டை : குடும்பச் சண்டை நடத்தும் இடமா இது..!

ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் காதலருடன் சென்ற பிரியங்கா சோப்ரா..!

பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

காதலர் குறித்து மனம் திறந்த இலியானா.. : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

Tags :-Viswaroopam 2 songs performed Shruthi Haasan Biggboss 2 stage

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: