Type to search

நாடோடிகள்-2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று ரிலீஸ்..!

CINEMA Cinema Head Line Kollywood

நாடோடிகள்-2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று ரிலீஸ்..!

Share
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இன்று மாலை 5 மணிக்கு, நடிகர் சூர்யா “நாடோடிகள்-2” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருக்கிறார்.(Naadodigal 2 first look poster today release)

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

”சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த ’நாடோடிகள்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.

நட்பின் மகத்துவத்தை பேசியதால் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்றது. தமிழில் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் ஆகி அங்கேயும் பெரும் வெற்றிப் பெற்றது.

தற்போது தமிழ் சினிமாவில் வெற்றிப்படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கும் ஜூரம் ஆக்கிரமித்துள்ளது. இதில் நாடோடிகள் படமும் தப்பவில்லை.

சமுத்திரகனி தன்னுடைய ஆஸ்தான ஹீரோவான சசிக்குமார் வைத்து ”நாடோடிகள்” படத்தின் இரண்டாம் பாகத்தை வேகமாக முடித்து விட்டார்.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. முக்கிய வேடத்தில் இயக்குநர் சமுத்திரகனியும் நடிக்கிறார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை செய்கிறார்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், இன்று மாலை 5 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட உள்ளார். இப் படம் வரும் ஆகஸ்ட் இறுதியில் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

<MOST RELATED CINEMA NEWS>>

நித்யா – பாலாஜி இடையேயான சண்டையை அதிகம் காண்பிக்க காரணம் : கமல் ஹாஸன் விளக்கம்..!

கோலமாவு கோகிலா படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் ரிலீஸ்..!

ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் தல பொங்கல் : விஸ்வாசம் லேட்டஸ்ட் அப்டேட்..!

விஸ்வரூபம் 2 படத்தின் ‘நானாகிய நதி மூலமே’ சிங்கிள் பாடல் வெளியீடு..!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!

பாலாஜி – நித்தியா இடையில் வலுக்கும் உச்சக்கட்ட சண்டை : குடும்பச் சண்டை நடத்தும் இடமா இது..!

ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் காதலருடன் சென்ற பிரியங்கா சோப்ரா..!

பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

காதலர் குறித்து மனம் திறந்த இலியானா.. : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

Tags :-Naadodigal 2 first look poster today release

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Tags: