Type to search

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!

CINEMA Cinema Head Line Kollywood

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தற்போது திரையுலக சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகள் படங்களாக வெளியாகி வெளிவருகின்றன. அந்தவகையில், மறைந்த சில்க் ஸ்மிதா வாழ்க்கை ”த டர்டி பிக்சர்” என்ற பெயரில் படமாகி திரைக்கு வந்தது. சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்த வித்யாபாலனுக்கும் தேசிய விருது கிடைத்தது.(Manjima Mohan like act Jayalalitha historical movie)

இந்நிலையில், நடிகையர் திலகம் என்று பாராட்டு பெற்ற சாவித்திரியின் வாழ்க்கையை தமிழில் ”நடிகையர் திலகம்” என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் படமாக எடுத்து வெளியிட்டனர்.

சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்த படத்துக்கு இரு மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. சஞ்சய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான சஞ்சு படத்தில் அவரது கதாபாத்திரத்தில் ரன்பீர்கபூர் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் சாதனைகள் நிகழ்த்திய மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் வாழ்க்கையும் படமாகிறது.

மறைந்த ஆந்திர முன்னாள் முதல்–மந்திரியும், பிரபல தெலுங்கு நடிகருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை படமாகி வருகிறது. இதில் என்.டி.ராமராவாக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். மலையாள பட உலகில் கவர்ச்சியாக நடித்து முன்னணி நடிகர்கள் படங்களை வசூலில் பின்னுக்கு தள்ளிய ‌ஷகிலாவின் வாழ்க்கையும் படமாக எடுத்துள்ளனர். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

மறைந்த முதல் – அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையையும் படமாக எடுக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இதில் அவரது கதாபாத்திரத்தில் வித்யாபாலன் அல்லது கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என்று பேசப்பட்டது.

இந் நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் ஜெயலலிதா வாழ்க்கை கதை படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது.. :-

”ஜெயலலிதா வாழ்க்கை கதை படத்தில் அவரது வேடத்தில் நடிக்க ஆசை உள்ளது. ஜெயலலிதாவின் தைரியம் எனக்கு பிடிக்கும். தனது முடிவில் இருந்து எந்த காரணத்துக்காகவும் அவர் பின்வாங்க மாட்டார். அவருடைய தைரியம் எல்லா பெண்களுக்கும் இருக்க வேண்டும்” என்றார்.

<MOST RELATED CINEMA NEWS>>

நித்யா – பாலாஜி இடையேயான சண்டையை அதிகம் காண்பிக்க காரணம் : கமல் ஹாஸன் விளக்கம்..!

கோலமாவு கோகிலா படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் ரிலீஸ்..!

ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் தல பொங்கல் : விஸ்வாசம் லேட்டஸ்ட் அப்டேட்..!

விஸ்வரூபம் 2 படத்தின் ‘நானாகிய நதி மூலமே’ சிங்கிள் பாடல் வெளியீடு..!

சஞ்சய்தத் வாழ்க்கைப் படத்தில் நடித்ததால் ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார்..!

பாலாஜி – நித்தியா இடையில் வலுக்கும் உச்சக்கட்ட சண்டை : குடும்பச் சண்டை நடத்தும் இடமா இது..!

ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் காதலருடன் சென்ற பிரியங்கா சோப்ரா..!

பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

காதலர் குறித்து மனம் திறந்த இலியானா.. : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

Tags :-Manjima Mohan like act Jayalalitha historical movie

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: