Categories: CINEMACinema Top StoryKollywood

பாம்பு மனிதர்கள்.. ஆளை விழுங்கும் ராட்சத புழுக்கள்.. : குழந்தைகளுக்கான ’அனுமனும் மயில்ராவணனும்’ திரைப்படம்..!

”அனுமனும் மயில்ராவணனும்” அனிமேஷன் திரைப்படம் ஜூலை மாதம் 6ஆம் திகதி வெளியாகிறது.(Anumanum Mayilravananum animation kids movie)

பல் மருத்துவம் படித்து, பின்னர் இங்கிலாந்து சென்று அனிமேஷன் பயின்று, வார்னர் பிரதர்ஸ் உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் திரைப்பட நிறுவனங்களில் பணியாற்றிய எழில் வேந்தன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

நாடு முழுதும் உள்ள குழந்தைகளின் மனதை கவர்ந்த கார்ட்டூன் நிகழ்ச்சியான சோட்டா பீம்-ஐ உருவாக்கிய கிரீன் கோல்டு அனிமேஷன் நிறுவனம், ”அனுமனும் மயில்ராவணனும்” எனும் அனிமேஷன் திரைப்படத்தை தயாரித்துள்ளது.

மேலும்,  ராமாயணத்தின் கடைசிப் பகுதியில் வரும் சம்பவங்களை தொகுத்து, கற்பனை கலந்து இந்த படத்தை உருவாக்கி இருப்பதாக, எழில் வேந்தன் தெரிவித்துள்ளார்.

இப்படம் குறித்து மேலும் அவர் கூறியதாவது.. :-

“ஹனுமன் தான் இப்படத்தின் ஹீரோ. இறுதிப் போரில் நிராயுதபாணியாக நிற்கும் ராவணனிடம் இன்று போய் நாளை வா என ராமர் அவகாசம் கொடுக்கிறார். போர் களத்தில் இருந்து அரண்மனை செல்லும் ராவணன், தனது சகோதரனான பாதாள உலகின் ராஜாவான தந்திரக்காரன் மயில்ராவனைக் கொண்டு ராமரையும், லட்சுமணனையும் சிறைப் பிடிக்கிறார்.

அவனை அழித்து, ராமரையும், லட்சுமணனையும் அனுமன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை சாகசம் நிறைந்த, சுவாரஸ்யமான கதையமைப்பில் சொல்லியுள்ளோம்.

முதல் முறையாக பத்து தலை ராவணன், புதுமையான ஒரு வடிவத்தில் சித்தரிக்கபட்டுள்ளார். அவரது பத்து தலைகளும் தனித்தனியே செயல்படும். பாம்பு மனிதர்கள், ஆளை விழுங்கும் ராட்சத புழுக்கள் என படத்தில் வரும் பல வித்தியாசமான கேரக்டர்கள் குழந்தைகளை வெகுவாக கவரும்.

இந்த படத்தை முழுக்க முழுக்க சென்னையிலேயே உருவாக்கியுள்ளோம். முதல் முறையாக இந்தியாவில் தயாரான சர்வதேச தரம் கொண்ட இதிகாசக் கதையம்சம் உள்ள 3டி அனிமேஷன் படமாக ‘அனுமனும் மயில்ராவணனும்’ இருக்கும்.

அத்துடன், இந்தியா முழுவதும் சுமார் 350 திரையங்குகளில் இப்படம் திரையிடப்படுகிறது. ஜூலை 6 ஆம் திகதி இப்படம் திரைக்கு வருகிறது”

என அவர் கூறியுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

நித்யா – பாலாஜி இடையேயான சண்டையை அதிகம் காண்பிக்க காரணம் : கமல் ஹாஸன் விளக்கம்..!

கோலமாவு கோகிலா படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் ரிலீஸ்..!

ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் தல பொங்கல் : விஸ்வாசம் லேட்டஸ்ட் அப்டேட்..!

விஸ்வரூபம் 2 படத்தின் ‘நானாகிய நதி மூலமே’ சிங்கிள் பாடல் வெளியீடு..!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!

பாலாஜி – நித்தியா இடையில் வலுக்கும் உச்சக்கட்ட சண்டை : குடும்பச் சண்டை நடத்தும் இடமா இது..!

ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் காதலருடன் சென்ற பிரியங்கா சோப்ரா..!

பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

காதலர் குறித்து மனம் திறந்த இலியானா.. : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

Tags :-Anumanum Mayilravananum animation kids movie
Aarav T

Share
Published by
Aarav T
Tags: animation kids movieAnumanum MayilravananumAnumanum Mayilravananum directorAnumanum Mayilravananum Latest StillsAnumanum Mayilravananum movie stillsAnumanum Mayilravananum Trailer 01Ezhil VendanNarayanan VaidyanathanTamil animation moviesTamil Cinema News

Recent Posts

செக்கச் சிவந்த வானம் பட பாடகியின் திக் திக் நிமிடங்கள்

பூமி பூமி சுத்தும் சத்தம் ஒரு பக்கம் ரிபீட் மோடில் ஓட, கள்ள களவாணி என அடுத்த பாடலிலும் தனது சார்ட் பஸ்டர் ஹிட் ரேட்டை தக்க…

46 mins ago

உறியடி 2: Motion Poster வெளியானது

தலித்தியம், சாதி அரசியல் மற்றும் மாணவர்கள் பலிகடாவாக்கப்படுகின்றமையை அடிப்படையாக வைத்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் உறியடி. Uriyadi 2 Motion Poster Tamil…

1 hour ago

வெற்றி மாறன் தயாரிப்பில் மனிஷா யாதவ்

மனிஷா யாதவ் தற்போது வெற்றி மாறன் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதுபற்றி மனிஷா கூறிய போது: ஒரு குப்பை கதை படத்துக்கு பிறகு எனக்கு…

2 hours ago

தனுஷ் இயக்கும் படத்தில் 4 ஹீரோக்களுக்கு 2 ஹீரோயின்களா?

நடிகர் தனுஷ் இயக்கும் 2வது படத்துக்கான பணியில் பிஸியாகி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷுடன் சேர்த்து மொத்தம் நான்கு ஹீரோக்களாம். ஆம் சரத்குமார், நாகார்ஜூனா, எஸ்.ஜே.சூர்யா என…

4 hours ago

கேட்டு வாங்கிய கீர்த்தி சுரேஷ்!

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள சாமி படத்தின் 2ம் பாகமான சாமி 2 நாளை உலகம் முழுவதும் வெளியாகின்றது. Saamy Square Release Tamil Cinema…

4 hours ago

அரவிந்த் சுவாமியின் படவரிசையில் மேலுமொன்று இணைகிறது…!!

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் பின் அரவிந்த் சுவாமி கைவசம்‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, ‘செக்கச்சிவந்த வானம்’ என அடுக்கடுக்காக படங்கள் வரிசையில் நிற்க, மற்றுமொரு…

5 hours ago